Kayilae Aagasam song lyrics in tamil - soorarai potru - - Saindhavi - GV Prakash Kumar
கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணீலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா
தூண்கி இருந்த கேணியிலும்
பால் சுரக்க கூடுமையா
தூதுவளை காம்புகளும் தேன் வழியாதோ
உச்சி வெயில் வேளையிலே
உந்த வரம் தூறல் ஒன்னு
தொண்டையில வந்து விழ ஊர் நனையாதோ
கையிலே ஆகாசம்
கொண்டு வந்த உன் பாசம்
காலமே போனாலும் வாழ்ந்திடும் ராசா
கண்ணீலே நீராட
காஞ்ச நெலம் போராட
பூத்ததே ஆயிரம் பூ சிரிச்சிடு ராசா
அன்னத்த தட்டுல வச்சு
அம்புலிய காட்டி நின்ன
தாயுமே நெனவு நெருங்க
பொறந்தது காலம்
கன்னத்துல கைய வச்சு
காத்திருந்த சனங்களும்த்தான்
பல்லக்கில் ஏறி போக
மறஞ்சது சோகம்
பல்லக்கில் ஏறி போக
மறஞ்சது சோகம்
தண்டட்டியில் காகங்கள
ஓட்டி நின்ன பாட்டிகளும்
தட்டான சுத்தி வர
தாங்கல லூட்டி
கிட்டடியில் மேகங்கள
தொட்டு விடும் ஏக்கத்தில
கட்டான் தரைகளுமே போடுது போட்டி
ஏ நானா நே நா னே நானானா நானானே
ஏ நானா நே நா னே நானானா நானானே