Mailaanji Mailaanji Songs Lyrics from Namma Veettu Pillai Tamil Movie

0

மயிலாஞ்சி மயிலாஞ்சி பாடல் வரிகள்

MovieNamma Veettu Pillai
படம்நம்ம வீட்டுப் பிள்ளை
MusicD. Imman
LyricsYugabharathi
Singers        Pradeep Kumar,
Shreya Ghoshal
Year2019

ஆண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண் : கண்ணாடி போல
காதல் உன்ன காட்ட
ஈரேழு லோகம்
பாத்து நிக்குறேன்

ஆண் : கண்ணால நீயும்
நூல விட்டு பாக்க
காத்தாடியாக
நானும் சுத்துறேன்

பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்
மனோகரா உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண் : ஹா…..ஆஅ….
குழு : உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண் : ஆ…..மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
ஆண் : கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

ஆண் : ஹேய் எஹ் எஹ் எஹ்…..

குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண் : கோயில் மணியோசை
கொலுசோட கலந்து பேச
மனசே தாவுகின்றதே…..ஏ….

ஆண் : தாயின் உடல் சூட்ட
மறவாத குழந்தை போல
உசுரே ஊறுகின்றதே….ஏ….

பெண் : விளக்கும் கூட
வெள்ளி நிலவாக
தெரியும் கோலம் என்னவோ….ஓஒ….ஓஒ

ஆண் : கணக்கில்லாம
வந்து விடும் காதல்
குழப்பும் செய்தி அல்லவோ…..ஓ…..ஓஒ….

பெண் : அழகே நீ பேசும் தமிழ
அறிஞ்சா ஓடாதோ கவலை
உன்ன நான் தாலாட்டவேனே மனகூட்டுல

ஆண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் ஓன் மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
பூசேன்டி என ஆஞ்சி

பெண் : பல்லாக்கு போல நீயும்
என்ன தூக்கி
தேசாதி தேசம் போக எண்ணுறேன்

ஆண் : வெள்ளாட்டு மேல
பட்டுபூச்சி போல
ஆளான உன்னை ஆள துள்ளுறேன்

பெண் : சதா சதா
சந்தோஷமாகுறேன்
ஆண் : மனோகரி உன் வாசத்தால்
உன்னால நானும் நூறாகுறேன்

பெண் : நூறாகுறேன்

குழு : பறக்குறேன் பறக்குறேன்
தெரிஞ்சுக்கடி
பெண் : ஹா…..ஆஅ….
குழு : உனக்கு நான் எனக்கு நீ
புரிஞ்சுக்கடி

பெண் : மயிலாஞ்சி மயிலாஞ்சி
மாமன் நீ மயிலாஞ்சி
கையோடும் காலோடும்
சேத்தேனே உன்ன ஆஞ்சி


ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)