Oru Nooru Murai Songs Lyrics from Dev Tamil Movie

0

ஒரு நூறு முறை பாடல் வரிகள்

MovieDev
படம்தேவ்
MusicHarris Jayaraj
LyricsThamarai
Singers        Sathyaprakash
Year2019

ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

நெடுதூரம் முன்னே
நீண்டு கொண்டே செல்ல
ஒரு வார்த்தையாலே
தூரத்தை நீ கொள்ள

ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே

என்னை நீ எடுத்தாய் சிறை
தாமரை பூ வருமோ தரை
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை

நெஞ்சுக்குளே நீ நினைக்கும் அதை
நான் சொல்ல வேண்டுமென்றால் பிழை
வேறொன்றும் தோன்றவில்லை நான் மழலை

ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

நான் மழையினில் நனைந்தது இல்லை
ஓஹ் நடுவினில் குளித்து இல்லை
நான் மரகத மலைகளை பார்க்க
என் கனவிலும் வாய்த்தது இல்லை 


விலாவில் சிறகுகள் கண்டேன்
உலாவ உன்னுடன் வந்தேன்
எழுந்தேன் விழுந்தேன் கரைந்தேன்

ஒரு நூறு முறை
வந்து போன பாதை
அட இன்று மட்டும்
ஏனோ இந்த போதை

ஏன் என்று சொல் கண்ணே
ஏன் வந்தேன் உன் பின்னே

நீ பறந்திடும் உயரத்தில் இருந்து
ஓஹ் பறவையின் பார்வையில் பார்த்தாய்
ஆஹ் சிறு சிறு உருவங்கள் விரைந்து
ஓஹ் நகர்வதை எறும்பென நினைத்தாய்

எல்லாமே நடக்குது இன்று
உனக்கும் பிடிக்கிது நன்று

மறந்தேன் எனை நான் இழந்தேன்

இது போல எந்த நாளும் என்றும் இல்லை
இனி மேலும் வரும் என்று நம்பவில்லை

வான் எங்கும் ஓஹ் கார்மேகம்
வா என்றல் ஹே நீர் வார்க்கும்

ஒரு தொகை மயில் தொற்றி கொண்ட தோளில்
மழை ஈரம் வந்து சாரல் வீசும் நாளில்
ஏதேனும் சொல் பெண்ணே
நீ சொல்லும் சொல் தேனே

ஓஹ் ஏன் என்னை நீ எடுத்தாய் சிறை
தாமரை பூ வருமோ தரை
காற்றிலும் நீ செதுக்கும் கானல் சிலை

நெஞ்சுக்குளே நினைக்கும் அதை
நீ சொல்ல வில்லை என்றல் பிழை
போகட்டும் நம்பிவிட்டேன் நீ மழலை


Tags

ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)