Visiri Songs Lyrics from Enai Noki Paayum Thota Tamil Movie

0

விசிறி பாடல் வரிகள்

MovieEnai Noki Paayum Thota
படம்எனை நோக்கி பாயும் தோட்டா
MusicDarbuka Siva
LyricsThamarai
Singers        Shashaa Tirupati,
Sid Sriram
Year2019

எதுவரை போகலாம்
என்று நீ சொல்லவேண்டும்
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள்
மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்

யாரோ யாரோ கனாக்களில் நாளும் 
நீ சென்று உலாவுகின்றவள்
நீ காணும் கனாக்களில்
வரும் ஓர் ஆண் என்றால்
நான்தான் எந்நாளிலும்

பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி

என் வீட்டில் நீ நிற்கின்றாய் 
அதை நம்பாமல் என்னை கிள்ளிக்கொண்டேன்
தோட்டத்தில் நீ நிற்கின்றாய்
உன்னை பூவென்று எண்ணி கொய்ய சென்றேன்


புகழ் பூமாலைகள் தேன் சோலைகள் 
நான் கண்டேன் ஏன் உன் பின்
வந்தேன் பெரும் காசோலைகள்
பொன்மாலைகள் வேண்டாமே
நீ வேண்டுமென்றேன் உயிரே

நேற்றோடு என் வேகங்கள் 
சிறு தீயாக மாறி தூங்க கண்டேன்
காற்றோடு என் கோபங்கள்
ஒரு தூசாக மாறி போக கண்டேன்

உன்னை பார்க்காத நாள் பேசாத 
நாள் என் வாழ்வில் வீண் ஆகின்ற
நாள் தினம் நீ வந்ததால் தோள் தந்ததால் ஆனேன்
நான் ஆனந்த பெண் பால் உயிரே

ஹோ ஹோ ஹோ
எதுவரை போகலாம் என்று 
நீ சொல்லவேண்டும் 
என்றுதான் விடாமல் கேட்கிறேன்

தேன் முத்தங்கள் மட்டுமே போதும் என்று
சொல்வதால் தொடாமல் போகிறேன்

உன் போன்ற இளைஞனை 
மனம் ஏற்காமல் மறுப்பதே
பிழை கண்டேன் உன்
அலாதி தூய்மையை
என் கண் பார்த்து பேசும்
பேராண்மையை

பூங்காற்றே நீ வீசாதே ஓஓஓஓ
பூங்காற்றே நீ வீசாதே
நான்தான் இங்கே விசிறி


ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ

0 അഭിപ്രായങ്ങള്‍
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ (0)